தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்தக் கணிப்பின் படி, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இளம் தலைமுறை வாக்காளர்கள் பெருமளவில் நடிகர் விஜய் பக்கம் சாய்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் நேரடியாக கருத்துகளைப் பெற்று இந்தக் கணிப்பை லயோலா முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 235 தொகுதிகளில் 81,375 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களில் 54.8%, கிராமப்புறங்களில் 45.2% மக்களிடம் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணிப்பின் முடிவுகளின்படி,
திமுக முதல் இடம் பிடித்து, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு அதிகம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்
அதிமுக மூன்றாவது இடம் பிடிக்கும்
என கணிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு,
25% – ஆம்
17% – ஓரளவு
47% – நிறைவேற்றவில்லை
என்று மக்கள் பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
நன்று – 37%
சரியில்லை – 54%
கருத்து சொல்ல விரும்பவில்லை – 39%
என்று பதில்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய்யின் அரசியல் வருகையால் எந்த கட்சிகளின் வாக்கு வங்கி அதிகம் பாதிக்கப்படும்? என்ற கேள்விக்கு,
முதலில் திமுக
இரண்டாவது விசிக
பாதிக்கப்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் சுற்றுப்பயணம் தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு,
ஆம் – 41%
இல்லை – 24%
ஓரளவு – 27%
என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களின் வயது விபரம்:
31–45 வயது – 41.3%
21–30 வயது – 25.6%
46–60 வயது – 23.5%
மத ரீதியான பங்கேற்பு:
இந்துக்கள் – 81.71%
கிறிஸ்தவர்கள் – 10.55%
இஸ்லாமியர்கள் – 7.75%
தமிழகத்தில் சுமார் 1.45 கோடி இளம் தலைமுறை வாக்காளர்கள் இருப்பார்கள் என கூறப்படும் நிலையில், இவர்களில் பெரும்பாலானோர் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்றும், அதற்கு அடுத்தபடியாக அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், சீமான் ஆகியோருக்கு ஆதரவு இருக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மொத்தத்தில், இந்த லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக – விஜய் தலைமையிலான அரசியல் நகர்வுகள் மையமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.