தமிழக மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த திட்டம், தற்போது சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாளை நடக்கும் விழாவில் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த லேப்டாப்கள், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நாளை நடைபெறும் இந்த விழாவிற்கு பிறகு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும்.
Edited by Siva