தமிழகத்தின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 16-இல் திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 17-இல் உழவர் திருநாள் என அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வருகின்றன.
இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய தினமான ஜனவரி 14-ஆம் தேதி (புதன்கிழமை) போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறுமின்றிச் சென்று வர ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல் அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு போகிப் பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில், புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 14 முதல் 18 வரை) தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பிப்ரவரி மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.