பண மோசடி வழக்கில் நடிகரும், முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் ரூ.3.5 கோடி பணம் வாங்கி ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில், பெங்களூரு விமான நிலையத்தில் அவரை காவல்துறை கைது செய்தது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அஜய் வாண்டையார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் நடந்த தகராறில், மதுபோதையில் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

மன்னார்குடியைச் சேர்ந்த அஜய் வாண்டையார் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, பின்னர் அதிமுகவில் இணைந்து ஐ.டி. விங் பொறுப்பில் இருந்தார். ஹைதராபாத் தொழிலதிபரிடம் ரூ.2.11 கோடி மோசடி செய்ததாகவும் ஏற்கனவே வழக்கு உள்ளது. தொடர்ந்து பல புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!