காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளில் ஒரு கிராம் கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது தற்போது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி நிபுணர்கள் அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான அதிநவீன கருவிகளை கொண்டு நடத்திய ஆய்வில், இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 55 கிலோ எடையுள்ள இரு உற்சவர் சிலைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்த நிலையில், அதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பல கிலோ தங்கம் எங்கே போனது என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தங்கம் கலக்காமல் சிலைகளை செய்து மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva