பாயாசத்தில் தூக்க மாத்திரை... பாட்டியின் 10 சவரன் நகைகளைத் திருடிய 14 வயது சிறுமி!
Dinamaalai January 09, 2026 05:48 PM

உறவினர்களையே நம்பக் கூடாது என்று சொல்கிற காலம் இது. கீழ் வீட்டில் வாடகைக்கு இருந்தவரின் 14 வயது மகள் ஆசையாக வீடு தேடி வந்து பாயாசம் கொடுத்தாள் என்பதற்காக அதை வாங்கிக் குடித்த பாட்டி, மயக்கமடைந்த நிலையில், பாட்டியில் 10 சவரன் நகைகள் மாயமாகி போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வருபவர் மமலாபி (75). இந்நிலையில் வீட்டின் மேல் தளத்தில் வசித்த மமலாபியிடம், கீழ் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பத்ருன்னிஷா பேகத்தின் 14 வயது மகள், “பாயாசம் செய்து தரட்டுமா?” எனக் கேட்டுள்ளார். சிறுமி ஆசையாக கேட்பதால் சம்மதித்த பாட்டி, அந்த பாயாசத்தை குடித்ததும் மயக்கமடைந்தார்.

மறுநாள் காலை கண் விழித்தபோது, கழுத்தில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில் தாய், மகள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குடும்ப கடனை அடைக்க, பாட்டிக்கு தூக்க மாத்திரை கலந்த பாயாசம் கொடுக்க தாய் திட்டமிட்டது தெரிய வந்தது.

மயக்கத்தில் இருந்த பாட்டியின்10 சவரன் நகைகளை கழற்றி, அதை அடகு வைத்து தங்களது கடனைத் தீர்த்துள்ளனர். மீதமிருந்த பணமும், நகைகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், 14 வயது சிறுமியை சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி, அதன் பின்னர் அரசு இல்லத்தில் சேர்த்தனர். தனியாக வசிக்கும் முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.