அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News January 10, 2026 08:48 AM

பொதுவாக அன்னாசி பழம் நம் உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது .
உதாரணமாக அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு பகுதியில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுபடுத்தி வலியினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது.மேலும் இந்த பழம் மூலம் நம் உடலில் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 
 
1.பொதுவாக அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற கடுமையான நோய்கள் விலகி விடும் .
2.அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைத்து ஸ்லிம்மாக்குகிறது  
3.மேலும் ஆரோக்கியமான அன்னாசி பழம் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
4.ஆரோக்கியமான அன்னாசி பழம் உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு  பெரிதும் பயன்படுகிறது. 
5.ஆரோக்கியமான  அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.
6.நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. 
7.நம் உடலுக்கு நலம் தரும் அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். 
8.இந்த ஆரோக்கியமான அன்னாசி பழத்தில்  உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
9.மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
10.ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.