ஆபரணத் தங்கத்தின் விலை காலை, மாலை என இரு வேளைகளிலும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. உலக சந்தை நிலவரம், டாலர் மதிப்பு மாற்றம், பொருளாதார சூழல் ஆகியவை தங்க விலையை மேலே தள்ளி வருகின்றன. இதனால் திருமணம், சுபநிகழ்ச்சி, பண்டிகைக்காக தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வார இறுதிநாளான இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.12,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200 ஆகிவிட்டது. கடந்த சில நாட்களாக இருந்த சிறிய சரிவுகளுக்குப் பிறகு, இன்று தங்கம் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்துடன் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னை சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.7 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000 ஆகிவிட்டது. பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்கி வருவதால் தேவை அதிகரித்துள்ள நிலையில், தங்க விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!