நகைக்காக பெண் எரித்துக் கொலை.... கொடூரம்!
Dinamaalai January 10, 2026 04:48 PM

 

அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் வீட்டில் கடந்த 8-ம் தேதி மாலை பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டதுடன், வீட்டுக்குள் இருந்து புகையும் வெளியே வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல் கட்டுப்பாட்டறைக்கும் சீனிவாசனுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது சீனிவாசனின் மனைவி அமுதா தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

அமுதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சீனிவாசனின் டீக்கடையில் வேலை செய்து வந்த அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தகுமார் மீது சந்தேகம் எழுந்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவ நாளில் அமுதாவை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற சாந்தகுமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து கத்தியால் குத்தி கொலை செய்து தீ வைத்தது தெரியவந்தது. சாந்தகுமாரிடம் இருந்து அமுதாவின் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்காகவே கொலை செய்ததாக அவர் கூறியுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.