உத்தரப் பிரதேசத்தின் துத்தி சட்டப்பேரவை தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவும், மூத்த பழங்குடியினத் தலைவருமான விஜய் சிங் கோண்ட் உடல்நலக் குறைவால் லக்னௌவில் காலமானார். 71 வயதான அவர், சிறுநீரக பிரச்னைக்காக சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1980-ல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் சிங் கோண்ட், துத்தி தொகுதியில் காங்கிரஸ், சுயேச்சை, ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி என பல்வேறு கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றவர். 2024 இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியின சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என அறியப்பட்டார்.

அவரது மறைவு பழங்குடியின சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய் சிங் கோண்டின் உடல் இன்று மாலைக்குள் துத்திக்கு கொண்டு வரப்பட்டு, கந்தர் ஆற்றங்கரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!