2025-ம் ஆண்டு முழுவதும் தங்க சந்தை யாரும் கணிக்க முடியாத அளவுக்கு அதிரடியாக நகர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை சுமார் 52 முறை புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தாலும், நகை வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்ப இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதனைத் தொடர்ந்து 2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது.
அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த வீழ்ச்சி நகை வாங்குவோருக்கு சிறிய நிம்மதியை அளித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
ஜனவரி 2-ம் தேதி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,640-க்கும், ஒரு கிராம் ரூ.12,580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த சூழலில், சென்னையில் நேற்று தங்கம் விலையில் மீண்டும் சரிவு காணப்பட்டது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000-க்கும், ஒரு கிராம் ரூ.272-க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை சற்று உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.50, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.2,68,000-க்கும், ஒரு கிராம் ரூ.268-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை (சவரன்)
09.01.2026 (இன்று) – ரூ.1,02,400
08.01.2026 (நேற்று) – ரூ.1,02,000
07.01.2026 – ரூ.1,02,400
06.01.2026 – ரூ.1,02,640
05.01.2026 – ரூ.1,02,080
04.01.2026 – ரூ.1,00,800
ஒரு நாள் ஏற்றம், மறுநாள் இறக்கம்… தங்கம் விலை தொடர்ந்து சாமானியர்களின் மனதை சோதித்து வருகிறது!