தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில் இன்று காலை முதலே பலரும் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் பொங்கலுக்கு தொடர் விடுமுறையாக பலரும் ஊர்களுக்கு செல்லும் நிலையில், மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, **ஜனவரி 10ம் தேதி சென்னையில் அனைத்து வகையான பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்**.

கடந்த மாதம் டிசம்பர் 3ம் தேதி மழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டது. அந்த விடுமுறை நாளை ஈடுகட்டும் வகையில் இன்று அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி வழக்கம் போல் இயங்கும்.

பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதைப் பொறுத்து, தொடர்ந்த மழை காரணமாக ஒடுக்கப்பட்ட கல்வி நாட்களை மீட்டும் விதமாக அனைத்து பள்ளிகளும் திறந்து கொள்ளப்படுகின்றன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!