கற்பனைக் கதைகளில் வரும் ‘அமேசான்’ தீவுகளைப் போல, நிஜ வாழ்க்கையிலும் ஆண்களுக்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது இந்த ‘சூப்பர்ஷீ’ தீவு.
பின்லாந்து நாட்டின் கடற்கரைக்கு அருகில் 8.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு, கிறிஸ்டினா ரோத் என்ற பெண் தொழிலதிபரின் சிந்தனையில் உருவானது.
இங்கு பெண்கள் தங்களைச் சுற்றி யாரும் (ஆண்கள்) கவனிக்கிறார்கள் என்ற அழுத்தம் இல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும் என்பதே இந்தத் தீவின் முக்கிய நோக்கம்.
இந்தத் தீவுக்குச் செல்ல ஆண்களுக்குக் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இது ஆண்களுக்கு எதிரானது அல்ல, மாறாகப் பெண்கள் மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இடமாகும்.
ஒரே நேரத்தில் 8 பெண்கள் மட்டுமே தங்கும் வசதி கொண்ட இந்தத் தீவில், யோகா, தியானம், காட்டில் நடைப்பயணம் மற்றும் பாரம்பரிய குளியல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
எழுத்தாளர்கள் முதல் பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் வரை பல துறைகளைச் சேர்ந்த பெண்கள், வெளி உலக அழுத்தங்களில் இருந்து விடுபட இந்த ரகசியத் தீவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.