தூத்துக்குடி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் அட்டை கொண்டு எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுத்துக் கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் விபத்து காப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இந்த காப்பீட்டு திட்டத்தில் வெறும் ரூ.700 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கிறது. அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற விரும்புவோர் அஞ்சலகத்தில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி காப்பீட்டில் சேரலாம்.
அஞ்சலகங்களில் பாஸ்போர்ட், பிசினஸ் போஸ்ட், ஆதார் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. மேலும் தபால்காரரிடமே ஆதார் அட்டை காட்டி வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!