இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, வதோதராவில் வலைப்பயிற்சியின் போது உள்ளூர் பந்துவீச்சாளர் ஒருவரின் கனவை நனவாக்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பைத் தொடருக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் கோலி, தனக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய இளம் வீரர்களின் கடின உழைப்பைப் பாராட்டியதோடு, அவர்களுடன் உரையாடி உற்சாகப்படுத்தினார்.
இது குறிப்பாக, ஒரு இளம் பந்துவீச்சாளரின் வேண்டுகோளை ஏற்று, அவரது ஐபோன் மற்றும் கிரிக்கெட் பந்து ஆகியவற்றில் கையெழுத்திட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“>
மேலும் “இந்த போன் நீண்ட காலம் நிலைக்காமல் போகலாம், ஆனால் இந்த வீடியோ என்றும் நிலைத்திருக்கும்” என்று அந்த இளம் வீரர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். மைதானத்தில் ஆக்ரோஷமான வீரராகக் கருதப்படும் விராட் கோலி, இளம் கிரிக்கெட் வீரர்களிடம் காட்டிய இந்த எளிமையும் கனிவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்தாலும், அடிமட்ட அளவில் போராடும் வீரர்களைக் கௌரவிக்கும் கோலியின் இந்தச் செயல், அவரது விளையாட்டுப் பண்பை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.