விசில் போடு..! “தூள் கிளப்பும் பராசக்தி படம்”.. முதல் நாளில் மட்டும் இம்புட்டு கோடி வசூலா..? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!
SeithiSolai Tamil January 12, 2026 03:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி நடித்துள்ள நிலையில் நேற்று இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகன், நடிகர் அதர்வா மற்றும் நடிகை ஸ்ரீலிலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அதன்படி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 27 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.