தற்போது குழுகுழு சீசன் நிலவிவரும் நிலையில் குளூரை அனுபவதிப்பதற்காக பலரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தளங்களுக்கு மக்கள் அதிக அளவு சுற்றுலா செல்கிறார்கள்.அதிலும் தற்போது புத்தாண்டு முடிந்து பொங்கல் விடுமுறை தொடங்கி இருப்பதால் கொடைக்கானலை நோக்கி பலரும் படையெடுக்கிறார்கள்.
இதன்காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கஸ் வாக், குணா குகை, துன் பாறை, பைன் ஃபாரஸ்ட், ரோஜா பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் இனிமேல் பணமாக வசூலிக்காமல் ஆன்லைனில் மூலமாக மட்டுமே வசூலிக்கப்படும் என வனத்துறை அறிவித்திருக்கிறது.
குறிப்பாக குணா குகை, துன் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், பேரிஜின் மேரி ஆகிய பகுதிகளுக்கான நுழைவு கட்டணம் ஆன்லைனில் மட்டுமே வசூல் வசூலிக்கப்படும்.. நேரடி பணமாக வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்திருக்கிறது.