தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பிரதான சாலையில், இளைஞர் ஒருவர் ஓடும் பைக்கின் மீது படுத்துக்கொண்டு ‘சூப்பர்மேன்’ பாணியில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த பகல் நேரத்தில், மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அந்த இளைஞர் தனது உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பணயம் வைத்து இந்த விபரீத செயலில் ஈடுபட்டார். ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாகச் சென்ற அவர், கைப்பிடியை விடுத்து பைக்கில் படுத்தபடி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“>
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் போக்குவரத்து போலீசார், சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அந்த இளைஞரை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சாலை விதிகளைத் துச்சமாக மதிக்கும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.