திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கிச் சென்ற மூன்று பேருந்துகள் இன்று அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றின் பின் ஒன்றாக மோதியுள்ளன. இந்த விபத்தில் ஒரு பேருந்து நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சில மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், காயம் அடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.