சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றார். ரயிலின் வேகம் மற்றும் காற்றழுத்தத்தை உணராமல் அவர் செய்த இந்தச் செயல், நொடிப் பொழுதில் விபரீதமாக முடிந்தது. அதிவேகமாக வந்த ரயில் அந்த இளைஞரின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கின்றன. “வெறும் சில லைக்ஸ்களுக்காகவும், ஷேர்ஸ்களுக்காகவும் இப்படி உயிரோடு விளையாடலாமா?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபகாலமாக ரயில் தண்டவாளங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் விளிம்பில் நின்று ரீல்ஸ் எடுக்கும்போது பல உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த வீடியோவை எச்சரிக்கையாகப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இது போன்ற முட்டாள்தனமான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.