காற்று சுத்திகரிப்பானுக்கான ஜி.எஸ்.டி. வரியை, 05 வீதமாக குறைக்க முடியாது; உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மத்திய அரசு பதில்..!
Seithipunal Tamil January 11, 2026 02:48 PM

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 05 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,  நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 

அத்துடன், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரிய மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதன்படி, காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அதிகாரத்தை இது பயனற்றதாக்கி விடும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.