ரூர்கேலா அருகே விமானம் விபத்து: தரையில் விழுந்த சிறிய ரக விமானம், 6 பேர் காயம்...!
Seithipunal Tamil January 11, 2026 04:48 AM

ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 9 இருக்கைகள் கொண்ட ‘A-1’ வகை விமானம், தலைநகர் புவனேஸ்வரிலிருந்து ரூர்கேலா நோக்கி பறந்து கொண்டிருந்தது.

ரூர்கேலாவை அடைவதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் முன்பாக, ஜல்டா கிராமம் அருகே சென்றபோது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளும், 2 பணியாளர்களும் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.