சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி புறப்படும் விஜய்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Dinamaalai January 11, 2026 04:48 PM

 

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. குழுவினர் பொதுமக்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையிலும் அவர்கள் பங்கேற்று ஆதாரங்களை வழங்கினர்.

இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி, வரும் 12-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நாளை விஜயிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் வரை விசாரணை நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சி.பி.ஐ. விசாரணைக்காக விஜய் நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் விஜயின் டெல்லி பயணம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.