“இப்படி புதுசு புதுசா இறங்குறாங்களே!”.. 50 ஆவது பிறந்தநாளில் பிரபல பாடகி செய்த விபரீத கல்யாணம்.. மாப்ள யாருன்னு பார்த்தா மயக்கமே வந்துடும்..!!
SeithiSolai Tamil January 12, 2026 12:48 AM

பிரபல ‘பிலோ கைலி’ (Rilo Kiley) இசைக்குழுவின் பாடகி ஜெனி லூயிஸ், தனது 50-வது பிறந்தநாளையொட்டி ஒரு திருமணத்தைச் செய்துகொண்டார்.

ஆனால், அவர் மணம் முடித்தது எந்த ஒரு ஆணையும் அல்ல, தனது செல்லப் பிராணியான ‘பாபி ருபார்ப்’ (Bobby Rhubarb) என்ற நாயைத்தான்! தனது செல்ல நாய்க்குட்டி மீது கொண்ட அதீத பாசத்தால், முறைப்படி அதற்கு மாலை மாற்றி அவர் ‘திருமணம்’ செய்துகொண்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு தனது நாய்க்குட்டிக்காகவே “பப்பி அண்ட் எ ட்ரக்” (Puppy and a Truck) என்ற பாடலை எழுதிப் பாடிய ஜெனி, தற்போது அதனையே வாழ்நாள் துணையாகவும் வரித்துக்கொண்டார்.

இந்த வினோத திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் களைகட்டின. இது சட்டப்படி செல்லாது என்றாலும், நாயின் மீதான தனது காதலை உலகிற்குச் சொல்லவே இப்படிச் செய்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ‘நாயுடனான கல்யாண’ வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.