தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று வெனிசுலா. அந்த நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ இருந்து வந்தார். உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரராக நிக்கோலஸ் செயல்படுவதாகவும், அமெரிக்காவில் போதை பொருள் புலங்குவதற்கு காரணம் அவர்தான் எனவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
மேலும் வெனிசுல அதிபர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள். அதையடுத்து அவரை கைது செய்ய உதவுவதற்கு 131 கோடி பரிசு எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் அது 415 கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க சிறப்பு படையினர் வெனிசுலா மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்த அதிபர் மதுரோவையும் அவரின் மனைவியையும் கைது செய்து அமெரிக்கா கொண்டு வந்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
போதைப் பொருளுக்கு உதவுவதால்தான் வெனிசுலா அதிபரை சிறை பிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னாலும் அதற்கு பின்னணியில் வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. வெனிசுலா எண்ணெய் வளம் மிக்க ஒரு நாடு.உலகில் அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் 10வது இடத்தில் இருக்கும் லிபியாவில் 48 பில்லியன் பேரல் எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் 119 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். ஆனால் அதிக கச்சா எண்ணெய் வளத்தை கொண்ட வெனிசுலா நாட்டில் 303 பில்லியன் பேரல்கள் எண்ணெய் உள்ளது. இது தற்போதைய உற்பத்தியில் சுமார் 830 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என சொல்கிறார்கள்.
எனவே அங்கிருக்கும் எண்ணெய் வளத்தை சுரண்டவே அமெரிக்கா அந்த நாட்டை குறை வைத்திருப்பதாக சொல்கிறார்கள். தற்போது அந்த எண்ணெய்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.