வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதி என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரசும் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதையடுத்து நியூயார்க் நகரில் இருவர்மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி தெரிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by The State of America (@therealstateofamerica)
இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு நிலைமை சீரற்றதாக இருப்பதாகவும், ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுக்கள் சாலைகளில் சுற்றித் திரிந்து அமெரிக்கர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெனிசுலாவில் அமெரிக்கர்களை கடத்தல், சிறைபிடித்தல், சித்திரவதை, பயங்கரவாத தாக்குதல், உள்நாட்டு அமைதியின்மை, மோசமான சுகாதார வசதிகள் போன்ற கடும் ஆபத்துகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே வெனிசுலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கில், நாடு முழுவதும் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!