Breaking: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் டைம் இருக்கு…! “மேலும் 12 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு”… மிஸ் பண்ணிடாதீங்க..!!
SeithiSolai Tamil January 19, 2026 06:48 PM

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், புதியதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் (ஜனவரி 18) முடிவடைந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில், விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாகவும் அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் அலுவலகங்களிலும் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.