ஃபகத் ஃபாசிலை இயக்கும் டான் பிக்ச்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன்
ராகேஷ் தாரா February 12, 2026 03:14 PM

பராசக்தி படத்தைத் தொடர்ந்து டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தபடியாக இதயம் முரளி திரைப்படம் உருவாகி வருகிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் , கயடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. 

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் 

இயக்குநர் விக்னேஷ் சிவனின் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் ஆளும் கட்சியான திமுக குடும்பத்தில் பெண்ணெடுத்தவரும் கூட. தற்போது தயாரிப்பாளர் இயக்குநர் என இரு களங்களில் இயங்கி வருகிறார். இவரது டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்தையும் டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருந்தார். தற்போது சிம்பு இந்த படத்தில் இருந்து விலகவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். கூடிய விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

இதயம் முரளி படத்தில் இணைந்த ஃபகத் ஃபாசில் 

தற்போது ஆகாஷ் பாஸ்கரன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தை தயாரித்தும் இயக்கியும் வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தற்போது இணைந்துள்ளார். முன்னதாக சூப்பர் டீலக்ஸ் , வேலைக்காரன் , மாமன்னன் , மாரீசன் அகிய படங்களில் ஃபகத் தமிழில் நடித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.