அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. கமேனி மறைவுக்கு முதல் முறையாக இந்திய அரசாங்கத்தின் தரப்பி இருந்து ஐந்து நாட்கள் கழித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமேனி மறைவு குறித்து கருத்து கூறாமல் இருக்கும் பிரதமர் பிறநாட்டு தலைவர்கள் கொலையை ஆதரிக்கிறதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டு அந்நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
#WATCH | Foreign Secretary Vikram Misri, on behalf of Government of India, signed the Condolence Book at the Embassy of Iran in New Delhi today, and offered condolences to the slain Supreme Leader of Iran Ayatollah Ali Khamenei. pic.twitter.com/A3IP2d0diX
— ANI (@ANI) March 5, 2026
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து இந்தியா வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்தது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதுதில்லியில் உள்ள ஈரானிய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுடன் தொடர்புடைய இராணுவத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பிராந்திய பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Foreign Secretary Vikram Misri, on behalf of Government of India, signed the Condolence Book at the Embassy of Iran in New Delhi today, and offered condolences to the slain Supreme Leader of Iran Ayatollah Ali Khamenei.
— ANI (@ANI) March 5, 2026
(Pics Source: XPD Division, MEA) pic.twitter.com/IvDEjWgp3u