தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் அதற்கான பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திலும் விருப்ப மனு பெறுதல், தேர்தல் வாக்குறுதிகள் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விழுப்புரம் மாவட்டம், வி. சாலையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை அவரது கட்சியில் எந்த கட்சிகளும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. இதில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் திமுக தலைமையிடம் 40 சட்டமன்ற தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி வந்தது.
திமுக மீதான அதிருப்தியால் தவெகவுடன் கூட்டணிஇதற்கு திமுக தலைமை சரியான பிடி கொடுக்காமலும், தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இதனால், காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. இதனால், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவராக இருந்து வரும் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்தது. இதற்கு அச்சாரமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
மேலும் படிக்க: திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தமானது.. 28 இடங்கள் ஒதுக்கீடு..
காங்கிரஸுக்கு பிரம்மாண்ட ஆஃபர் கொடுத்த தவெகஇதே போல, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மறுக்காமல் பதிலளித்திருந்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி, 70 சட்டமன்ற தொகுதிகள், 20 எம்பிக்கள் சீட், உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத ஒதுக்கீடு ஆகிய பிரமாண்ட ஆஃபர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தருவதாக தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், திமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறி, ஆட்சி அதிகாரம் கோரலில் அதிருப்தி ஆகியவை காரணமாக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனித்து களம் காண்கிறதா தவெகஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தங்கள் கட்சிக்கான தொகுதிகளையும் பெற்றுள்ளது. இதனால், கூட்டணி வாசல் கதவை திறந்து வைத்திருந்த விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவதாக இருந்த ஒரு கட்சியும் வராமல் சென்றுள்ளது. இதனால், வேறு கட்சிகளும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வராத நிலை உள்ளது. எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் தனித்து விடப்பட்டு, களம் காணும் சூழ்நிலை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தவெகவுக்கு சாதகமான நிலைஇதில், விஜய்க்கு ஒரு சாதகமான நிலை உள்ளது. என்னவென்றால், கூட்டணி கட்சிகளின் துணை இன்றி தேர்தல் களமாடினால் தவெகவுக்கான வாக்கு சதவீதம் என்ன என்பதை அறிவதுடன், அரசியல் களத்துக்கும் தனது வலிமையை நிரூபித்து காட்டலாம் என்பதாகும்… எது எப்படியோ…. தேர்தல் களம் எப்படி மாறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: மாநிலங்களவை தேர்தல்.. வேட்பாளரை அறிவித்த அதிமுக.. ஒரு சீட் பாமகவிற்கு ஒதுக்கீடு..