இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தெய்வதிருமகள்’. இப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் சாரா அர்ஜுன்.
தற்போது வளர்ந்து இளம் நாயகியாக உருவெடுத்துள்ள சாரா அர்ஜுன், அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்ததை அடுத்து, சாராவிற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
சாராவின் இந்த அபார வளர்ச்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறியதாவது, “சாரா எனக்கு ஒரு மகள் போன்றவர். சிறுவயதில் அவரது பெற்றோரை விட என்னிடம்தான் அவர் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இப்போதும் வாரத்திற்கு ஒரு முறையாவது நாங்கள் அலைபேசியில் பேசிக்கொள்வோம்.
சமீபத்தில் ‘துரந்தர்’ படத்தின் வெற்றியைக் கண்டு அவரிடம் பேசினேன். ‘உன் நடிப்பைப் பார்த்து உன் அப்பா, அம்மா மிகவும் பெருமைப்பட்டிருப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்களும் என்னைப் பார்த்து பெருமைப்பட்டிருப்பீர்களே அப்பா?’ என்று கேட்டார். அந்தப் பதில் என்னை நெகிழச் செய்தது. ஒரு தந்தையாக அவரை நினைத்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
தற்போது சாரா அர்ஜுன் பான்-இந்தியா அளவில் ஒரு முக்கிய நட்சத்திரமாகப் பார்க்கப்படு
கிறார்.