திமுக, அதிமுக, தேமுதிக, பாமக எம்.பி.க்கள் யார் யார்?.. இன்று வேட்புமனு தாக்கல்!..
Webdunia Tamil March 06, 2026 12:48 AM


2021 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது தேமுதிக. அந்த கட்சிக்கு எத்தனை சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவிலலி. அதேநேரம் அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த எம்பி பதவி பிரேமலதாவின் சகோதரர் சுதீஸுக்கு கிடைக்கவிருக்கிறது.

இன்று எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கான கடைசி நாள் என்பதால் வேட்பம்னுவை சதீஷ் தாக்கல் செய்கிறார்.. அதற்கு முன் அவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.

அதேபோல், திமுக சார்பாக திருச்சி சிவா மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். மீதமுள்ள ஒரு தொகுதி காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டிருப்பது..
ஒருபக்கம் அதிமுக சார்பாக தம்பிதுரை மற்றும் அந்த கூட்டணியில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.