நான் வேலைக்காரின்னா என் காலில் விழுந்தது ஏன்?... சசிகலா கோபம்!..
WEBDUNIA TAMIL March 06, 2026 01:48 AM


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல அவருடனே இருந்தவர் அவரின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ. வசித்துவந்த போயஸ்கார்டன் வீட்டில் ஆளுமையாக இருந்தவர். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் ஜெயலலிதாவிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை சசிகலாவிடமும் தான் சொல்வார்கள். சசிகலாவிடமிருந்து மட்டுமே ஒரு தகவல் ஜெயலலிதாவுக்கு போகும்.. இப்படி கட்சியினருக்கும் ஜெயலலிதாக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தவர் சசிகலா..

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நீங்கள்தான் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.. நீங்கள்தான் முதலமைச்சராக வேண்டும் என இப்போதுள்ள ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அவரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தார்கள்.. அவரும் அதை ஏற்றுக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளராக மாறினார்.. டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சிறைக்கு சென்றார்.. ஆனால் அவர் சிறையில் இருந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.. அதோடு சசிகலா டிடிவி தினகரன், அதிமுகவுக்குள் வராமல் பார்த்துக் கொண்டார்..



20206 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலா தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சசிகலா ‘என்னை ஜெயலலிதாவின் பணியாளர் என சொல்கிறார்கள். நான் ஜெயலலிதாவின் பணியாளர் என்றால் என் காலில் விழுந்தது ஏன்?.. ஜெயலலிதா இருந்தபோது என்னை அமைச்சர்கள் நேரில் வந்து பார்ப்பார்கள்.. ஜெயலலிதாவிடம் ஒரு விஷயத்தை என் வழியாகத்தான் அமைச்சர்கள் சொல்வார்கள்.. போயஸ்கார்டனுக்கு வந்து பொதுச் செயலாளராக வேண்டும் என பணியாளரான என்னை கேட்டது ஏன்?’.. என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்..

இந்த கேள்வி அவர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து எழுப்பியதாகவே பார்க்கப்படுகிறது..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.