தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வரும் சிவாஜி கிருஷ்ண மூர்த்திகடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 05 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், குறித்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 03 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மொத்தம் 03 பிரிவுகளில் அவருக்கு, 02 ஆண்டுகள் மற்றும் 01 ஆண்டு மற்றும் 03 மாதம் சிறை விதிக்கப்பட்டு, ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.