ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம்; புதிய கேப்டனான இப்ராஹிம் சர்ட்ரான்..!
Seithipunal Tamil March 06, 2026 04:48 AM

10 வது டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியில் அரையிறுதி போட்டியின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 04 போட்டிகளில் 02 வெற்றி 02 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சர்ட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.