பிரிட்டன் அரசு, ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன் மற்றும் சூடான் நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை தடைசெய்யும் புதிய உத்தரவை புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த நாடுகளின் மாணவர்கள் நிரந்தரமாக பிரிட்டனில் அடைக்கலம் பெறும் நோக்கத்தில் கல்வி விசா முறையை தவறாக பயன்படுத்தி வந்ததாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
View this post on InstagramA post shared by ITV Politics (@itvpolitics)
இதற்காக உள்துறை அமைச்சர் ஷாப்னா மஹ்மூத், விசா நடைமுறையில் திருத்தங்களைச் சேர்க்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய உள்ளார். அவர் கூறியதாவது, “போர் மற்றும் கொடுமைகளை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு பிரிட்டன் அடைக்கலம் வழங்குகிறது. இருப்பினும், கல்வி விசா தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. இதை தடுக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.”

உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, கடந்த 2021 முதல் 2025 வரை இந்த நாடுகளிலிருந்து அடைக்கலம் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 470 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், திறன்மிக்க பணியாளர்களுக்கான விசாக்கள் பெறுவதிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!