அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக தொடரும் தாக்குதலின் போது, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் பயணம் செய்தோர் விமான சேவை தடையால் தங்கள் தூரப் பயணத்தை முடிக்க முடியாமல் சிக்கிக் கிடக்கின்றனர்.இந்த சூழலில் பிரபல நடிகர் சோனு சூட் துப்பாக்கி முன்வந்து, துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதியை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு மற்றும் வீடியோவில் தெரிவித்துள்ளதாவது,"போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கிறார்கள்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தங்குவதற்கிடம் இல்லையெனில், நாங்கள் பாதுகாப்பான இடத்தை இலவசமாக வழங்குகிறோம். தேசம், மதம், நிபந்தனைகள் பொருட்படாது.
மனிதாபிமானம் போதும். உதவி தேவைப்பட்டால் இன்ஸ்டாகிராமில் @dugastaproperties இல் DM அனுப்புங்கள். இந்த செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிருங்கள்."இந்த முயற்சி தற்போது பயணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.