NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
க.சே.ரமணி பிரபா தேவி March 05, 2026 08:14 PM

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

தேர்வு எப்போது?

மார்ச் 8ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்களை மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடக்கிறது. குறிப்பாக, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரத்துக்கு நடக்க உள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம்.

தேர்வு தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதும் வாய்ப்பு இதன்மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த முறை பி.எஸ்.சி. நர்ஸிங் படிப்பில் சேரவும் நீட் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்பட உள்ளது. 

விண்ணப்ப கட்டணம்

NEET UG 2026-க்கான விண்ணப்பக் கட்டணம் பல்வேறு பிரிவு மாணவர்களுக்கு மாறுபடும். குறிப்பாக, 

பொதுப் பிரிவினருக்கு ₹1,700,

EWS மற்றும் OBC (கிரீமி லேயர் அல்லாத) பிரிவினருக்கு ₹1,600,

SC, ST, PwBD மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ₹1,000

இந்தியாவிற்கு வெளியே இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ₹9,500. விண்ணப்பத்தின்போது கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும், அப்போதுதான் விண்ணப்பப் படிவம் முழுமையானதாகக் கருதப்படும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. இணையதளம்முதலில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://neet.nta.nic.in/என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பதிவுமுகப்புப் பக்கத்தில் உள்ள 'NEET UG 2026 Registration' என்ற இணைப்பைச் சொடுக்கவும்.
  3. விவரங்கள்புதிய பக்கத்தில் உங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவிட்டுப் பதிவு செய்யவும்.
  4. படிவம்பதிவு முடிந்ததும், விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாக நிரப்பவும்.
  5. கட்டணம்நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகச் செலுத்தவும்.
  6. சமர்ப்பித்தல்அனைத்து விவரங்களையும் சரிபார்த்து 'Submit' பொத்தானை அழுத்தவும்.
  7. பதிவிறக்கம்எதிர்காலத் தேவைக்காக உறுதிப்படுத்தப்பட்ட பக்கத்தை (Confirmation Page) பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து அறிய https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2026/01/202601081066816297.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.