“சூர்யா கூட ஆரம்பிச்சு…. சூர்யா கூடவே ஒரு ரவுண்டு வந்தாச்சு” 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்…. பழைய நினைவுகளில் மூழ்கிய த்ரிஷா….!!
SeithiSolai Tamil February 12, 2026 08:48 PM

இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா – த்ரிஷா நடித்த கிளாசிக் ஹிட் படமான ‘மௌனம் பேசியதே’, பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதையொட்டி நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது முதல் படமே சூர்யாவுடன் அமைந்தது பெரும் மகிழ்ச்சி என்றும், இப்போது தனது அடுத்த ரிலீஸான ‘கருப்பு’ படத்திலும் சூர்யாவுடனே நடித்திருப்பதால் ஒரு முழுமையான வட்டத்தை நிறைவு செய்ததாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

”இந்தக் குழுவில் யாரும் என்னை ஒரு அறிமுக நடிகையாக நடத்தவில்லை, ஒரு குடும்பமாகவே இருந்தோம்” என்று நெகிழ்ந்த த்ரிஷா, இயக்குநர் அமீர், நடிகை லைலா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 2000-களின் தொடக்கத்தில் காதலர்களின் ஃபேவரைட் படமாக இருந்த ‘மௌனம் பேசியதே’ மீண்டும் ரிலீஸ் ஆவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.