ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்
TV9 Tamil News February 13, 2026 01:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் 25-வது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. நடிகர் சிவ்கார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான பிறகு மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா, பிரித்விராஜன், குளப்புள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன் ஆகியோருடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், ராணா டகுபதி ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஜிவி பிரகாஷின் இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பராசக்தி படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ 5 ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் தணிக்கைச் செய்யப்படடத வெர்ஷனை ஓடிடியில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து பராசக்திப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

ஜீ 5 தமிழ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழ் தீ பரவட்டும்! We heard you all! Uncensored is finally here!🔥#Parasakthi is Now Streaming On ZEE5!🔥@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007… pic.twitter.com/4wRLUJRcEF

— ZEE5 Tamil (@ZEE5Tamil)

Also Read… Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.