தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு சுமார் 5,000 நிர்வாகிகளுக்கு மட்டும் பாஸ் கொடுத்து, பங்கேற்க வைத்து மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன்படி, தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் விஜய் மக்களிடையே உரையாற்றியமை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்க தயாராக வேண்டும் என்றும், எழுதி வைத்ததை வாசிக்கக் கூடாது. ஆட்சியில் பங்கு என்று விஜய் அழைத்தும் தவெக பக்கம் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து படிப்பது ஈஸி. அதை யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று அவரது மேடை பேச்சு குறித்தும் விமர்சித்துள்ளார்.
மேலும், விஜய் கைதேர்ந்த நடிகர் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அரசியலில் ஆதவ் மற்றும் அருண் இயக்கத்தில் ஸ்கிரிப்ட் படி நடிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.