உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?
Tamil Minutes March 05, 2026 01:48 PM

உடல் தூய்மையாகணும்னா அன்றாடம் குளிக்கிறோம். குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகிறோம். அதற்காக நிறைய வாசனைத் திரவியங்கள் எல்லாம் போட்டு நல்லா உடம்பை சுத்தம் செய்கிறோம். சரி. உடம்பை இப்படி சுத்தமா வச்சிக்குறோமே. மனசை எப்படி வச்சிக்கறது?

என்னைக்காவது யோசிச்சிருக்கிறோமா? மனசை எப்படிங்க சுத்தம் பண்றது? அது என்ன உள்ளே போய் நம்ம சர்வீஸா பண்ண முடியும்? இல்ல. அதைக் கழட்டி கழுவி அதை திரும்ப மாட்டி அந்த மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

அப்படின்னா இல்லதான். அப்போ மனசை சுத்தமா வச்சிக்கிறதுக்குன்னு ஏதாவது ஒரு விஷயம் பெரியவங்க சொல்லி இருப்பாங்க இல்லையா. அது என்ன அப்படின்னா…? மனதைத் தூய்மைப்படுத்துறதுக்கு இறைவனுடைய அருளாளர்கள் அருளிச் செய்து இருக்கக்கூடிய பதிகங்களை, பாடல்களைப் பாராயணம் செய்தால் மனம் தூய்மையாகும்.

அதுக்குத் தான் பெரிய பெரிய சோப்புக்கட்டி மாதிரி தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அலங்காரம் அனுபூதி… இதெல்லாம் என்ன? மனதைத் தூய்மை செய்கிற ஒரு பொருள். மனதைத் தூய்மை செய்யணும்னா நாம என்ன பண்ணனும்? உடம்புக்கு சோப்பு போட்டு நாம குளிக்கிற மாதிரி, மனதிற்குள்ளே இவற்றை உரு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதை நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதில் மிக முக்கியமானது இந்த கந்தர் அனுபூதி. இதைப் படிக்க படிக்க மனம் தூய்மையாகிக் கொண்டே இருக்கும். மனதில் இருக்கக்கூடிய தேவையற்ற கோபம், பொறாமை, ஆசை, பகை, வஞ்சனை இவை எல்லாமே களைந்து விடும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

Sankar Velu

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

Author: Sankar Velu

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.