குட் நியூஸ்..!! தங்கம் விலை இன்றும் விலை குறைந்தது!
Top Tamil News March 05, 2026 01:48 PM

ஆனால் இப்போது போர் காரணமாக பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ. 265 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது சவரனுக்கு ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை ரூ. 20 குறைந்து, ஒரு கிராம் ரூ. 295-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று (மார்ச் 05) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.