மதுரையில் பிரம்மாண்ட வ.உ.சி சிலை.. அடிக்கல் நாட்ட வருகிறார் குடியரசு துணைத்தலைவர் - முக்கிய அறிவிப்பு வெளியானது!
மதுரையில் அமைய உள்ள 140 அடி உயர சிதம்பரனார் சிலைக்கு வரும் 22ம் தேதி குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்ட உள்ளார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்...,” மதுரையில் 140 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் சிலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சிலை அமைவிடத்தில் நூலகம், பூங்கா உள்ளிட்டவை அமையவுள்ளது.
10 கோடி ரூபாய் செலவாகும்
சிலையின் முகத்தை பார்க்கும் வண்ணம் 2 லிப்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டரை ஏக்கர் நிலத்தை கப்பலூர் பிடிஆர் கல்லூரி நிர்வாகம் அளித்துள்ளது.15 மாதத்தில் சிலை அமைக்கப்பட்டு பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக 10 கோடி ரூபாய் செலவாகும். இதில் எந்த அரசியல் கட்சி சார்புடையது இல்லை. 22ம் தேதி நிகழ்வில் நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் என பேசினார்.