கடந்த பல தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த காங்கிரஸ் தற்போது திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் எனக்கு கேட்கிறது. கடந்த சில நாட்களாகவே பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி, கிரிஷ் சோடங்கர் ஆகியோர் அந்த கருத்தை வலியுறுத்தி வந்தனர்..
ஆனால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என ஸ்டாலின் கூறிவிட குறைந்தபட்சம் எங்களுக்கு 40 தொகுதிகளையாவது கொடுங்கள் என காங்கிரஸ் கேட்டது.. ஆனால் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக சொன்னது.. ஆனால் காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிகளையும், 2 ராஜ்ய சபா சீட்களையும் கேட்கிறது..
எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.. ராஜ்யசபா தொகுதிகளுக்கான பதவி வருகிற 4ம் தேதியுடன் முடிவடைகிறது.. எனவே 5ம் தேதி திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.. எனவே நீங்கள் கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்பதை மூன்றாம் தேதி இரவுக்குள் சொல்லிவிடுங்கள் என திமுக தரப்பில் காங்கிரஸுக்கு கெடுவித்திருப்பதாக சொல்லப்படுகிறது..
காங்கிரஸில் ஒரு பாதியினர் திமுக பக்கம் செல்லலாம் எனவும் ஒரு பாதியினர் தவெக பக்கம் செல்வோம் எனவும் கூறுகிறார்களாம். எனவே என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து வருகிறது.. சோனியா காந்தியை பொறுத்த வரை திமுகவுடனே கூட்டணி நீடிக்க வேண்டும் என விரும்புகிறாராம்,, ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை.
ஒருவேளை காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.. இதை காங்கிரஸ் எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..