தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிக கடுமையாக சாடினார்.
"தான் ஒரு டெல்டாகாரன் என்று கூறி உங்கள் காதுகளில் டால்டா ஊற்ற நான் வரவில்லை" என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த அவர், விவசாயிகளின் கஷ்டங்கள் தனக்கு நன்றாக தெரியும் என்றார்.
விஜய் vs ஸ்டாலின் என்ற போர்க்களத்தில், திமுக அரசு மணல் மாஃபியாக்களுக்கு துணையாக இருப்பதாகவும், கனிம வளங்களை கொள்ளையடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
"ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி என சிறுவர்கள் கூட சொல்ல தொடங்கிவிட்டார்கள்" என்று அவர் பேசியது கூட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், கிரிக்கெட்டில் சிஎஸ்கே போல, வரும் தேர்தலில் தவெக விசில் போடும் என்றும், டெல்லி அணி மற்றும் இதர அணிகளை தவெக அடித்து நொறுக்கும் என்றும் அதிரடியாக பேசினார். காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரங்களில் தமக்கு தெளிவான பார்வை இருப்பதாகவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
Edited by Siva