அதிமுக - திமுக கூட்டு!.. கருணாநிதியாலேயே முடியவில்லை!.. தஞ்சையில் விஜய் பேச்சு..
Webdunia Tamil March 04, 2026 04:48 PM


தவெக தலைவர் விஜய் தற்போது தஞ்சாவுரில் நடைபெற்ற தவெக பொதுகூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் 4900 தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் முன் விஜய் பேசியதாவது:

விஜய் வந்தால் நமக்கு பிழை பிழைப்பு போய்விட்டது என இரண்டு கட்சிகளும் (அதிமுக, திமுக) கூட்டு சதி செய்கின்றன.. ஒன்று நீ.. இல்லையென்றால் நான்.. நம்மால்தான் மக்களை ஏமாற்ற முடியும்.. விஜய் உள்ளே வந்து விடக்கூடாது.. நீ ஒரு பக்கம் SOP போட்டு விஜய் தடுத்துவிடு.. நானும் பழிக்கு மேல் பழியை போட்டு விஜயை தடுக்கிறேன்.. என இரு கட்சிகளும் டீலிங் பேசுகிறது.. இவர்களின் மக்களின் ஃபீலிங் முக்கியமில்லை.. டீலிங்தான் முக்கியம்..

ஸ்டாலின் வந்தால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும்.. விஜய் வந்து நம்ம தூங்க விடமாட்டேங்கிறானே.. இவன் கேள்வி கேக்குறது இல்லாம மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறானே’ எனை ஸ்டாலின் சார் நினைக்கிறார்.. இந்த விஜயை முடக்கலாம்.. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய விஜயை முடக்க முடியாது.. மக்களுக்கு நல்ல திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. கேட்டால் நிதிச்சுமை என சொல்கிறீர்களே. கருணாநிதி சிலை வைப்பதற்கு உங்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என மோசடியான வாக்குறுதியை திமுக கொடுத்தது.. நீட் தேர்வை மாநில அரசால் தடுக்க முடியாது என தெரிந்தும் பொய்யான வாக்குறுதியை கொடுத்தார்கள். மோசமானவர்களில் முக்கியமானவர்கள் என்று சொல்வார்களே.. அதுபோல மோசமான ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சிதான் இந்த திமுக.. நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்தும் மணல் கொள்ளையை ஆதரிக்கும் அரசு திமுக. ஊழல செய்வது மட்டுமே இவர்களின் நோக்கம்..

மீண்டும் நமது ஆட்சி என திமுக சொல்கிறது.. ஆனால் அது நடக்கவே நடக்காது.. திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை... ஸ்டாலினின் அப்பாவாலேயே அது முடியவில்லை’ என பேசினார் விஜய்.. மேலும் ஜனநாயகன் பிரச்சனைக்கு முதல்வர் பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.. ஆனாலும் அவருக்கும் அதற்கு ஆதரவு தெரிவித்த நபர்களுக்கும் நன்றி’ என விஜய் பேசினார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.