தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 பேர் கவலைக்கிடம்
Top Tamil News March 04, 2026 10:48 PM

ராணிப்பேட்டை அருகே பணியின்போது விஷவாயுத்தாக்கி நான்கு பேர் உயிர் ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வீசி.மோட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் ராணி டெக் தோல் மற்றும் ரசாயன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் ராணிப்பேட்டை, மாந்தாங்கல், சீனிவாசன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலை மற்றும் டேனரிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது குழாய் வாயிலாக ராணி டெக் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கே சுத்திகரிப்பு செய்வது வழக்கம். 

இந்நிலையில் குழாய் வாயிலாக கொண்டுவரப்படும் கழிவு நீர் தொட்டியில் அடைத்து ஏற்பட்டுள்ள நிலையில் அதனை சரி செய்யும் பணிக்காக நான்கு பணியாளர்கள் ஏற்பாடு செய்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் ஏழுமலை என்பவர் முதலில் மயங்கி தொட்டியில் விழுந்த நிலையில் அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து மூன்று நபர்கள் சென்ற போது ஏழுமலை உள்ளிட்ட நான்கு பேரும் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாலாஜாபேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் இருந்த நான்கு பணியாளர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இதில் ஏழுமலை, பிரகாஷ், சாந்தகுமார், கிட்டு ஆகிய நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.