விஜய்க்கு தைரியம் இருந்தால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எந்த பிரச்சனையென்றாலும் செய்தியாளர்களை சந்திக்கும் தில், திராணி எங்களுக்கு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்
இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் “திமுக–அதிமுக அரசு மறைமுகமாக செயல்படுகிறது” என நடிகர் விஜய் கூறியதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,, ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து பேசுவது மிகவும் எளிது. அதனை யார் வேண்டுமானாலும் பேச வேண்டும். விஜய் ஒரு கைதேர்ந்த நடிகர்.. அதனால் விஜய்க்கு சொல்லி தரத் தேவையில்லை.. எப்படியான பேச்சிற்கு எப்படி உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி தரத் தேவையில்லை.
நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், விஜய்க்கு தைரியம் இருந்தால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.. எந்த பிரச்சனையென்றாலும் செய்தியாளர்களை சந்திக்கும் தில், திராணி எங்களுக்கு உள்ளது. விஜய்க்கு அந்த தில் இல்லை.. ஆனால் தனக்கு மட்டுமே தில் இருப்பதை போல் எழுதி கொடுத்த பேப்பரை பேசுகிறார்.. ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் தான் டைரக்டர் என்றார்.
மேலும் விஜய் ஆட்சியில் பங்கு கொடுக்கிறோம்.. அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என்று அறிவித்தார். ஆனால் யாரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.. இதனால் அதிமுகவை வம்புக்கு இழுக்க தொடங்கி இருக்கிறார் விஜய், அதிமுகவை வம்பிழுத்தால் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்று விமர்சித்துள்ளார்
திமுக–காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சிலர் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் உள்ளன என்றும் நெருப்பு இல்லாமல் புகையாது என்ற நிலை உள்ளது. விரைவில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையிலான பிரச்சினை வெளிச்சத்துக்கு வரும்,” என அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவைப் பொறுத்தவரை, மற்ற கட்சிகள் இணைந்தாலும் சரி, இணைக்காவிட்டாலும் சரி, அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றார்.
பாஜக அதிக இடங்களை கோருகிறது எனக் கேட்கப்பட்டதற்கு, “தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்,” என தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
“அரசு பணத்தை அதிகமாக செலவழித்தாலும், தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்றார்.நாங்குநேரியில் இரட்டை கொலை உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளன. குடும்பங்களின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசு ஒரு லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியதாக கூறுவது மக்களை ஏமாற்றுவது,” என தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்தில் ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றம் எதுவும் இல்லை எனவும், அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.