2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், முதல் நூறு சட்டமன்றத் தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திகழ்கிறது. இந்த தொகுதியின் எண் 23 ஆகும். இது தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. சென்னையில் அமைந்துள்ள இந்த சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி முக்கிய மையத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமியை எதிர்த்து போட்டியிட்டு கிட்டத்தட்ட 29,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியை எடுத்துக் கொண்டால், 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலிருந்து இதுவரை திமுக ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், அதிமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே, சைதாப்பேட்டை தொகுதி திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தற்போது தமிழக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு உட்கட்டமைப்பு (இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர்) பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், இந்த தொகுதியில் மீண்டும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மீண்டும் திமுகவிற்கு சாதகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.